ஜனாதிபதி கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்

ஜனாதிபதி கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

இதன்பின்னர் மல்வத்தை மஹா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, அந்த பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர்,அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஆகியோரை  சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.