சீனாவின் தலையீட்டால் நசுக்கப்படும் மாணவர்கள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

சீனாவின் தலையீட்டால் நசுக்கப்படும் மாணவர்கள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஹொங்காங்கில் பல மாதங்களாக நீடித்து வரும் வன்முறைச் சம்பவங்களில் மாணவர்களின் தொடர்புகளை முற்றாக தளர்த்துமாறு கல்வி அமைச்சர் கெவின் யியுங் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது மீறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கோஷங்கள் எழுப்புவது, வகுப்புகளை புறக்கணிப்பது, புரட்சிகர பாடல்களை பாடுவது போன்ற போராட்டங்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் இனி மாணவர்கள் ஈடுபடக்கூடாது.

சீனா கொண்டுவந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு முதல் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏராளமான பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக கூறி 1500 க்கும் அதிகமானோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொங்காங்கில் குற்றப்பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டவரைபை எதிர்த்தே அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த புதிய சட்டம் ஹொங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பதுடன், நாட்டில் சீன தலையீட்டை அதிகரிக்க செய்யும் என அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.