'ஹரக் கட்டா'வின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது!

'ஹரக் கட்டா'வின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம - காலி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு காவல்துறை விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதான 'லொக்கு சமிந்த' எனப்படும் சமரசிங்க கமகே என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 3 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.