
இங்லீஷ் பிரீமியர் லீக்: மொஹமட் சாலாவின் இரண்டு கோல்கள் துணையுடன் லிவர்பூல் அணி வெற்றி!
இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், பிரைட்டன் அணிக்கெதிரான போட்டியில், லிவர்பூல் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
பால்மர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி, இன்று (வியாழக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா முதல் கோலை அடித்தார்.
இதனைத் தொடர்ந்து போட்டியின், 8ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மற்றொரு வீரரான ஜோர்தான் ஹெண்டர்சன் இரண்டாவது கோலை புகுத்தினார்.
இதன்பிறகு போட்டியின் 45ஆவது நிமிடத்தில், பிரைட்டன் அணியின் வீரரான லியாண்ட்ரோ ட்ரோஸார்ட் அணிக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, போட்டியின் 76ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா, தனது இரண்டாவது கோலை அடித்தார்.
மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டியின் இறுதியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றது.
ஏற்கனவே 2020-2021ஆம் ஆண்டுக்கான இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து சம்பியன் பட்டத்தை லிவர்பூல் அணி உறுதிசெய்து விட்டமை குறிப்பிடத்தக்கது.