கட்டுப்பாடு தளர்வின் பின்னர் மதுபானசாலைக்கு முன்பாக நீண்ட வரிசை
நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து, அக்கறைப்பற்றிலுள்ள மதுபானசாலையொன்றுக்கு முன்பான இன்று (21) காலை பலர் மதுபான கொள்வனவுக்காக வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மதுபானசாலைகள் திறக்கப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாமல், மதுபானம் கொள்வனவு செய்வதற்காக பலர் அக்கறைப்பற்று, சாகாமம் வீதியிலுள்ள மதுபானசாலையொன்றுக்கு முன்பாக நீண்ட வரிசையில் பல மணித்தியாலமத காணக்கூடியதாக இருந்தது.
எனினும், விடயமறிந்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த அக்கறைப்பற்று காவல்துறையினர், அங்கிருந்தவர்களை கடுமையாக எச்சரித்து, சமூக இடைவெளியை பேணுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடத்திலிருந்து, வடக்கு மற்றும் தெற்காக 50 கிலோமீற்றர் சுற்றுபுரத்தில் மதுபானசாலைகள் இல்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.