வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 24 பேரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 24 பேரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 24 பேரை கைது செய்வது தொடர்பில் சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 13 பேர் இதில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்களுள் இரண்டு பேர் தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.