தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் சுற்றாடலுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது - ஐ.நா

தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் சுற்றாடலுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது - ஐ.நா

எக்ஸ்-ப்ரெஸ் பேரல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்ட பின்னர் அதில் காணப்பட்ட இரசாயனங்கள் சுற்றாடலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹேனா சிங்கர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கணக்கிட்டு அதிலிருந்து மீள்வதற்கும் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பேரழிவை தடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டு இன்றுடன் ஒரு மாதமாகின்றது.

இதேவேளை எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் நாட்டின் கடற்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக நாட்டுக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிபுணர்கள், இன்று முற்பகல், குறித்த கப்பலை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளும் இந்தப் பணிகளின் இணைந்திருந்தனர்.

நேற்றைய தினம் குறித்த நிபுணர்கள் உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.