கொன்கஹவெல வனப்பகுதியில் தீ: 30 ஏக்கர் பகுதி தீக்கிரை

கொன்கஹவெல வனப்பகுதியில் தீ: 30 ஏக்கர் பகுதி தீக்கிரை

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கீழ் உள்ள மாத்தளை - நாவுல - கொன்கஹவெல வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நாவுல பிரதேச சபையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகரித்த காற்று காரணமாக தீப்பரவல் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் காரணமாக சுமார் 30 ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.