மாவட்ட ரீதியில் நேற்று பதிவான கொவிட் தொற்றாளர்களின் விபரம்

மாவட்ட ரீதியில் நேற்று பதிவான கொவிட் தொற்றாளர்களின் விபரம்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியான 2,248 பேரில் அதிகமானோர் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி, களுத்துறை மாவட்டத்தில் 424 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 411 பேருக்கும், கம்பஹாவில் 407 பேருக்கும், கண்டியில் 65 பேருக்கும், குருநாகலில் 95 பேருக்கும், காலியில் 54 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 51 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கேகாலையில் 67 பேருக்கும், புத்தளத்தில் 17 பேருக்கும், அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவில் தலா 3 பேருக்கும், மாத்தறையில் 97 பேருக்கும், பொலன்னறுவையில் 26 பேருக்கும், நுவரெலியாவில் 71 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இரத்தினபுரியில் 75 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 21 பேருக்கும், பதுளையில் 55 பேருக்கும், அம்பாறையில் 25 பேருக்கும், மட்டக்களப்பில் 85 பேருக்கும், திருகோணமலை 44, மன்னாரில் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மாத்தளையில் 26 பேருக்கும், மொனராகலையில் 17 பேருக்கும், கிளிநொச்சியில் 13 பேருக்கும், வவுனியாவில் 12 பேருக்கும் தொற்று உறுதியானதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.