கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிக்கை!

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிக்கை!

நேற்றைய தினம் (18) நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இவர்களில் 23 பெண்கள் மற்றும் 31 ஆண்கள் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (19) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,479 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இதுவரை 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 236,833 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 199,393 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.