நேற்று பதிவான கொவிட் தொற்றாளர்கள் விபரம்

நேற்று பதிவான கொவிட் தொற்றாளர்கள் விபரம்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியான 2,349 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 493 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 135 பேர் அவிசாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நேற்று 274 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 104 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 94 பேருக்கும், குருணாகலில் 166 பேருக்கும், காலியில் 111 பேருக்கும்  தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் 46 பேரும், கேகாலையில் 111 பேரும், புத்தளத்தில் 63 பேரும், அனுராதபுரத்தில் 81 பேரும், மாத்தறையில் 9 பேரும், பொலன்னறுவையில் 56 பேரும், அம்பாறையில் 39 பேரும், நுவரெலியாவில் 104 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டையில் 80 பேருக்கும், பதுளையில் 45 பேருக்கும், மட்டக்களப்பில் 174 பேருக்கும், மொனராகலையில் 24 பேருக்கும், கிளிநொச்சியில் 22 பேருக்கும், முல்லைத்தீவில் 13 பேருக்கும் தொற்று உறுதியானது.

அதேநேரம் திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 30 பேருக்கும் மன்னாரில் 25 பேருக்கும் நேற்று தொற்று உறுதியான அதேநேரம், தொற்று உறுதி செய்யப்பட்ட 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.