
கொவிட்-19 போருக்கான பொதுச் செலவு 190 பில்லியன் பவுண்டுகளாக உயர்வு!
கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான, போருக்கான பொதுச் செலவு, கிட்டத்தட்ட 190 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
திறைசேரியால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, நேற்று (புதன்கிழமை) தனது கோடைகால அறிக்கையில் நெருக்கடியை எதிர்த்து திறைசேரியின் தலைவர் (chancellor) ரிஷி சுனக், 30 பில்லியன் டொலர் தொகுப்பை அறிவித்த பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே உள்ளூர் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பல வணிகங்கள் மூடப்பட்டிருக்கும் லெய்செஸ்டரில் (Leicester) உள்ள அரசியல்வாதிகள், தங்கள் நகரத்திற்கு கூடுதல் உதவி ஒதுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நெருக்கடிக்கான நேரடி செலவுகள், சமீபத்திய நடவடிக்கைகளைத் தவிர்த்து, 158.7 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக ரிஷி சுனக் கூறியுள்ளார்.
30 பில்லியன் டொலர் கூடுதல் நிதியை அறிவித்தன் மூலம், மொத்தம் பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கிட்டத்தட்ட 3,000 பவுண்டுகள் ஒதுக்கப்படுகின்றது.
மேலும், 2020-21ஆம் ஆண்டுக்கான முழு திட்டமிடப்பட்ட சுகாதார வரவு செலவுத் திட்டத்தை விடவும் இது அதிகம்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-6351278828785619" data-ad-slot="1437470177" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins><script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>