நேற்று மாத்திரம் 57,371 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
நாட்டில் நேற்று மாத்திரம் 57,371 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
43,040 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதுடன் 11,349 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2,875 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை 107 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
