மாவட்ட ரீதியாக நேற்று பதிவான தொற்றாளர்களின் விபரம்

மாவட்ட ரீதியாக நேற்று பதிவான தொற்றாளர்களின் விபரம்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியான 2,372 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் 562 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் 455 பேருக்கும், களுத்துறையில் 188 பேருக்கும், கண்டியில் 22 பேருக்கும், குருநாகலில் 234 பேருக்கும், காலியில் 118 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 63 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கேகாலையில் 10 பேருக்கும், புத்தளத்தில் 70 பேருக்கும், அநுராதபுரத்தில் 34 பேருக்கும், மாத்தறையில் 32 பேருக்கும், பொலன்னறுவையில் 8 பேருக்கும், நுவரெலியாவில் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா 46 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இரத்தினபுரியில் 217 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 49 பேருக்கும், பதுளையில் 13 பேருக்கும், மட்டக்களப்பில் 115 பேருக்கும், திருகோணமலை 49, மன்னாரில் 16 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மாத்தளையில் 8 பேருக்கும், மொனராகலையில் 3 பேருக்கும், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.