கோப் குழு ஜூன் 22இல் கூடுகிறது

கோப் குழு ஜூன் 22இல் கூடுகிறது

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு, எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

குழுவின் தலைவரான பேராசிரியர் சரித்த ஹேரத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ள நிறுவனங்கள் எவை என்பது குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.