நகர சபை உறுப்புரிமையை இழந்த மூன்று நகர சபைத் தவிசாளர்கள்
நாவலப்பிட்டி, தங்காலை மற்றும் வெலிகம நகர சபைகளின் தவிசாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை நிறைவுறுதியுள்ளமையால், நகர சபைகளின் உறுப்புரிமைகளையும் அவர்கள் கைவிட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாவலப்பிட்டி நகர சபைத் தவிசாளர் சசங்க சம்பத் சஞ்ஜீவ, நகர சபையின் உறுப்புரிமையையும் கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தங்காலை நகர சபைத் தவிசாளரான ரவிந்து தில்ஷான், நகர சபையின் உறுப்புரிமையையும் கைவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், வெலிகம நகர சபைத் தவிசாளரான விஜேரத்ன ஜயவிக்ரம, நகர சபையின் உறுப்புரிமையை கைவிட்டுள்ளதாகவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.