கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை பணிப்பாளராக பணியாற்றிய, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய, காவல்துறை தலைமையக நலன்புரி பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வெற்றிடமான, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பதவிக்கு, நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஏ. எச். நுவன் அசங்க நியமிக்கப்பட்டுள்ளார்.