370 கிலோவுக்கும் அதிக நிறையுடைய காய்ந்த மஞ்சள் மீட்பு
மன்னார் - கோந்தைப்பிட்டி மற்றும் சிலாவத்துறை கடற்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது 370 கிலோவுக்கும் அதிக நிறையுடைய காய்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார் பகுதியை சேர்ந்த 33 மற்றும் 34 வயதுகளை உடையவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் 294 பீடிசுற்றும் இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.