கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகை கண்டுபிடிப்பு

கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகை கண்டுபிடிப்பு

கஹதுடுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரொயின் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதன்போது ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயினுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு இடையில் பெண் ஒருவரும் மற்றும் மூன்று ஆண்களும் அடங்குதாக தெரிவிக்கப்படுகிறது.