பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலைகள் மீள திறக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு தடுப்பூசி வழங்குவதற்காக சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் பாடசாலை செல்வதற்கு மாணவர்கள் மத்தியில் அச்சம் இருக்கக்கூடும்.  

இதனால், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் இவ்வாறு கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாடி தீர்மானிக்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.