எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவருக்கு பிணை!
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவர் அர்ஜுன ஹெட்டியாரச்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவரை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணைகளிலும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.