தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பேச்சாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும், பொறுப்புக்கூறல் குறித்து இந்தச் சந்திப்பில் தாங்கள் கலந்துரையாடப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.