மட்டக்களப்பில் இதுவரை 3,935 பேருக்கு கொவிட்!

மட்டக்களப்பில் இதுவரை 3,935 பேருக்கு கொவிட்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஏறாவூர் சுகாதார பிரிவில் 16 பேரும், செங்கலடி சுகாதார பிரிவில் 15 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11 பேரும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 05 பேரும், களுவாஞ்சிகுடி பகுதியில் 04 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிரிவில் 03 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3,935 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 57 பேர் மரணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கடந்த 6 தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 19,959 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.