உயிரிழந்த நிலையில் 17 வயது யானை மீட்பு
மட்டக்களப்பு உறுகாமம் குளத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் 17 வயதுடைய யானை ஒன்றை நேற்று (13) மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலிசார் 17 வயதுடைய யானையின் சடலத்தை மீட்டனர்.
இந்த யானை உயிரிழந்தது தொடர்பாக பிரேத பரிசோதனையை மேற்கொள்ள அம்பாறை வனவிலங்கு கால்நடை மருத்துவர் எம்.டி.திரு. புஷ்ப குமாரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக என பொலிசார் தெரிவித்தனர்.