காத்தான்குடியில் மேலும் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று

காத்தான்குடியில் மேலும் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று

காத்தான்குடி காவல் நிலையத்தில் மேலும் 3 அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் இரண்டு சிவில் பாதுகாப்பு படைவீரர்களும் உள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இம்மாத ஆரம்பத்தில் குறித்த காவல் நிலையத்தைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியிருந்தது.

பின்னர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலும் 3 அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதையடுத்து காத்தான்குடி காவல் நிலையத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்று வருகின்றன.