வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இந்த முறையும் தடை!

வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இந்த முறையும் தடை!

வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இந்த முறையும் சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சவூதி அரேபிய நாட்டவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
மக்காவுக்கான ஹஜ் யாத்திரை எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.