ஹெரோயின் விற்பனை,கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது

ஹெரோயின் விற்பனை,கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் களனிய பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு இணைந்து நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் விற்பனை,கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் குருணாகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரிடமிருந்து 102 கிராம் ஹெரோயினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அதேவேளை ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளிலும் ஹெரோயின் விற்பனை செய்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.