மிசுருவில் பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை மோதிச் சென்ற பாரவூர்தியின் சாரதி கைது

மிசுருவில் பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை மோதிச் சென்ற பாரவூர்தியின் சாரதி கைது

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மிருசுவில் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை மோதி இடித்து சென்ற பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி சேதமாக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினரால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பாரவூர்தியொன்று அந்த ஆலயம் மீது மோதிச் சென்றதாக தெரியவந்தது.

இந்நிலையில் குறித்த பாரவூர்தியின் சாரதி நேற்றைய தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் பாரவூர்தியும் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையில் பாரவூர்தியின் சாரதி முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும், அவர் முரணான தகவல்களை வழங்கி வருவதால் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.