நுவரெலியாவில் இன்று 3000 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!
நுவரெலியா பிரதேசத்தில் இன்று 3000 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா சுகாதார பணியகத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைபெற்றது.
இதன்போது நுவரெலியா பிரதேசத்தில் கடமையாற்றும் கிராமசேவகர்கள், கிராம அபிவிருத்தி அதிகாரிகள், காவல்துறையினர், இராணுவத்தினர், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல அரச உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ பிரதேசங்களிலும் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.