கொவிட் பரிசோதனை மாதிரிகளை கொண்டு சென்ற வாகனம் விபத்து

கொவிட் பரிசோதனை மாதிரிகளை கொண்டு சென்ற வாகனம் விபத்து

கொரோனா பரிசோதனை மாதிரிகளை கொண்டு சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்று கெஸ்பேவ பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் நோயாளர் காவு வண்டி வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.