இன்றும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

இன்றும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,123 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 210,102 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,214 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 1,789 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.