5000 ரூபாவை கொடுக்க மறுத்த சமுர்த்தி அதிகாரியை தாக்கிய பெண்!

5000 ரூபாவை கொடுக்க மறுத்த சமுர்த்தி அதிகாரியை தாக்கிய பெண்!

இரத்தினபுரி - கொலொன்ன - கெம்பனே கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர், தனக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனக் கூறி சமுர்த்தி அதிகாரியொருவரை தாக்கியுள்ளார். 

அப்பிரதேசத்தின் விகாரையொன்றில் இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுக்கு நிவாரணக் கொடுப்பனவை வழங்க சமுர்த்தி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த குறித்த, பெண் இரும்புக் கம்பியொன்றினால் சமுர்த்தி அதிகாரியை தாக்கியுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட சமுர்த்தி அதிகாரி சிகிச்சைக்காக கொலொன்ன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.