மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்

மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2,976 கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம்மாட்டத்தில் நேற்று மாத்திரம் 805 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரையில் கம்பஹாவில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,488 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 589 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரையில் அங்கு 53,533 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் களுத்துறையில் 300 பேரும், கண்டியில் 97 பேரும், குருணாகலையில் 79 பேரும், காலியில் 98 பேரும், யாழ்ப்பாணத்தில் 112 பேரும், கேகாலையில் 79 பேரும், புத்தளத்தில் 34 பேரும், அனுராதபுரத்தில் 107 பேரும், மாத்தறையில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

அதேநேரம் பொலன்னறுவையில் 60 பேரும், அம்பாறையில் 32 பேரும், நுவரெலியாவில் 128 பேரும், இரத்தினபுரியில் 94 பேரும், ஹம்பாந்தோட்டையில் 60 பேரும், பதுளையில் 14 பேரும், மட்டக்களப்பில் 73 பேரும், மொனராகலையில் 10 பேரும் கொவிட் தொற்று உறுக்குள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சியில் 21 பேருக்கும், முல்லைத்தீவில் 26 பேருக்கும், திருகோணமலையில் 9 பேருக்கும், மாத்தளையில் 51 பேருக்கும், வவுனியாவில் 85 பேருக்கும், மன்னாரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய எவருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.