சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு : இருவரை காணவில்லை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு : இருவரை காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

17 வீடுகள் முற்றாகவும், 978 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

106 இடைத்தங்கல் முகாம்களில், 6,177 குடும்பங்களைச் சேர்ந்த 26,806 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 5,710 குடும்பங்களைச் சேர்ந்த 22,975 பேர் தங்களது உறவினர்களது வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.