இன்றும் மழையுடனான வானிலை
நாட்டில் இன்றையதினம் (07) ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழைவீழ்ச்சி 50 மில்லிமீற்றர் அளவில் பதிவாகும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரண வானிலை நிலவும். எனினும் மன்னார் முதல் மாத்தறை வரை கொழும்பு மற்றும் காலி வழியான கடற் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கடற் பகுதிகளில் தெற்கே மேற்கு நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வரை அதிகரிக்கும்.
அதேபோன்று கடல் மட்டத்திலிருந்து காலி முதல் பொத்துவில் வரையிலும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் காங்கேசன்துறை வரை காற்றின் வேகம் (50-55) கிலோமீற்றர் வரை அதிகரிக்கும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களை,வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.