தலவாக்கலை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் கொவிட் தொற்றுறுதி
தலவாக்கலை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹொலிரூட் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கடந்த வாரம் கொவிட் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என்ற அடிப்படையில் தலவாக்ககலை காவல்நிலைய பொறுப்பதிகாரி சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவருடன் தொடர்பை பேணிய தலவாக்கலை காவல் நிலையத்தின் 3 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.