ஜா-எல பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 27 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

ஜா-எல பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 27 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கடும் மழை காரணமாக ஜா-எல பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை கடற்படை நிவாரணக் குழு முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் குறித்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது 33 கடற்படை நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும், தற்போது பல பகுதிகளில் வெள்ள நிலைமை குறைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.