அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 29 மீனவர்கள் கைது!

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 29 மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் - குடாநாடு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த  வெளிமாவட்ட மீனவர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களமும் கடற்படையும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போதே குறித்த 29 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கடலட்டை தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட 11 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் மன்னார் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம்  இருக்கவில்லை என்றும் யாழ்ப்பாண கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.