Update: மாவனெல்ல மண்சரிவில் சிக்கி பலியான தாய், தந்தையின் சடலங்களும் மீட்பு!

Update: மாவனெல்ல மண்சரிவில் சிக்கி பலியான தாய், தந்தையின் சடலங்களும் மீட்பு!

மாவெனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த நால்வரில் மேலும் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

57 வயதான தந்தை மற்றும் தாயின் சடலங்கேளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்படி பிரதேசத்தில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 23 வயதான மகளின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

பின்னர், தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, இன்று பிற்பகல் அவரின் தந்தை, தாய் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இந்நிலையில், மகனை தேடும் ந்டவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்ந்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.