பதுளை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

பதுளை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

பதுளை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமையவே தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி பதுளை சுகாதார பிரிவில் 31 பேருக்கும், ஹப்புத்தளை சுகாதார பிரிவில் 22 பேருக்கும், எல்ல சுகாதார பிரிவில் 21 பேருக்கும், மஹியங்கனை சுகாதார பிரிவில் 13 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம், வெலிமடை சுகாதார பிரிவில் 8 பேருக்கும், ஹாலிஎல சுகாதார பிரிவில் 7 பேருக்கும், மீகஹகிவுல சுகாதார பிரிவில் 6 பேருக்கும், கந்தகெட்டிய சுகாதார பிரிவில் 5 பேருக்கும், பசறை மற்றும் ஹல்தமுல்லை ஆகிய சுகாதார பிரிவுகளில் தலா இரண்டு பேருக்கும் தொற்றுறுதியானதாக பதுளை மாவட்டம் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் சுதர்சன் தெரிவித்துள்ளார்.