தென் அமெரிக்கா, தென்னாபிரிக்கா சென்றவர்களுக்கு இலங்கை வர அனுமதியில்லை
கடந்த 14 நாட்களுக்குள் தென் அமெரிக்க நாடுகளுக்கு மற்றும் தென்ஆபிரிக்காவுக்கு சென்றிருந்த எந்தவொரு விமான பயணிக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த விமான பயணிகள் மற்றும் இடைமாறல் (Transit) பயணிகள் எவரும் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.