வருமான வரிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு தொடர்ந்தும் இடைநிறுத்தம்!
மேல் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தொடர்ச்சியாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியினுள் இந்த செயற்பாடு தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும்.
எனினும் இக்காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்களை மீண்டும் புதுப்பிக்கும்போது, எவ்வித அபராதமும் அறவிடப்படமாட்டாது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.