சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 130, 672 பேர் பாதிப்பு!
நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களில் 31, 303 குடும்பங்களைச் சேர்ந்த 130, 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகமழை, வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களால், ஒரு உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கைமய, அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த 1119 குடும்பங்களைச் சேர்ந்த 5067 பேர் 27 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், 200 குடும்பங்களைச் சேர்ந்த 792 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அனர்த்தங்களால் 5 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 317 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.