விருந்துபசாரம் நடத்த அனுமதியளித்த நட்சத்திர விருந்தகம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைப்பு

விருந்துபசாரம் நடத்த அனுமதியளித்த நட்சத்திர விருந்தகம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைப்பு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, கொழும்பில் பிறந்தநாள் விருந்துபசாரம் நடத்த அனுமதியளித்த நட்சத்திர விருந்தகம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த பிறந்தநாள் விருந்துபசாரம் தொடர்பான, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் சாட்சிகளுடன் பகுப்பாய்வு சாட்சிகளையும் ஆராய்வதற்கு கொழும்பு குற்றவியல் பிரிவிடம் இந்த விசாரணைக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் உட்பட சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து தகவல்களைப் பெற்று விசாரணை மேற்கொள்வதற்கான பணிகள் கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏனைய விசாரணைகள் கொழும்பு கோட்டை காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.