அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார கோளாறு -நீர் வழங்கலில் தடை
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனால் இன்றைய தினம் கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும்,மொரகஸ்முல்ல, ராஜகிரிய மற்றும் ராஜகிரிய பிரதான வீதிக்குட்பட்ட இடங்கள் முதல் நாவல சந்தி வரையில் நீர் வழங்கலில் தடை ஏற்படும்.
எனினும் மின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026