கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 162,397ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 195,169ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,566 ஆகவும் காணப்படுகிறது.