கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக

கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்திலும் கொழும்பு நகரிற்குள் நுழைவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசைகளாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பகுதியில் இன்று காலை நீண்ட வரிசையாக வாகனங்கள் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் இருந்த நீண்ட வரிசைகளை வான்வழி காட்சிகள் ஊடாக அவதானிக்க கூடியதாக இருந்தது.

வத்தளையில் இருந்து பேலியகொட வரையில் இவ்வாறு நீண்ட வரிசை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.