சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு குறித்து இன்று விசாரணை
தமிழக சட்டப்பேரவையில் 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
2017இல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தி.மு.க.வின் சக்கரபாணி, தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவரை முடிவெடுக்குமாறு கூறி தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் நிறைவு செய்தது.
இந்நிலையில், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கே உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.