இந்தியாவில் 7 இலட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 இலட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதோடு, மேலும் 482 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 இலட்சத்து 43 ஆயிரத்து 481ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 653ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் தொற்றுக்கு உள்ளான 2 இலட்சத்து 65 ஆயிரத்து 770 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 4 இலட்சத்து 57ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பில் முதலிடத்திலுள்ள மகராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 இலட்சத்து 17 ஆயிரத்து 121ஆகவும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9,250ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேநேரம் 2ஆவது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்து 18 ஆயிரத்தையும் 3ஆம் இடத்திலுள்ள டெல்லியில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்தையும் கடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.