நாளை முதல் அனைத்து அஞ்சல் நிலையங்களும் திறக்கப்படும்!
நாடு முழுவதுமுள்ள அனைத்து அஞ்சலகங்கள் மற்றும் உப அஞ்சலகங்களை நாளை முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதத்திற்கான பொது மக்களின் கொடுப்பனவுகளை வழங்குதல், ஒளடதங்களைப் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவுகளுக்கு உரித்தானவர்கள், அதற்கான அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை என்பனவற்றைப் பயன்படுத்தி, அஞ்சலகங்களுக்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வீடுகளில் உள்ள நோயாளர்களுக்காக, அரச வைத்தியசாலைகளில், வாராந்த பரிசோதனைகளில் வழங்கும் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளும், நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அஞ்சல்மா அதிபர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரச்சினைகள் இருக்குமாயின், 1950 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.